டில்லியில் நாங்கள் தான்… பாஜ புதிய தகவல்

452
Spread the love

டில்லி சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், மாலை 6 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் வெளியிடப்பட்டன. இதில், மொத்தமுள்ள 70 இடங்களில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி 56 இடங்கள் வரை கைப்பற்றி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்பட்டது. ஆனால் இதனை ஏற்க பா.ஜ., தரப்பு மறுத்துள்ளது. கருத்து கணிப்புக்கள் வெளியிடப்பட்ட பிறகு கட்சியின் பார்லி., குழு உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் ஆகியோருடன் அமித்ஷா, மீனாட்சி லேகி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு மீனாட்சி லேகி கூறுகையில், கருத்து கணிப்பு சரியான கணிப்பு அல்ல. அது மட்டுமின்றி இந்த புள்ளி விபரம் எடுக்கப்பட்டது மாலை 4 முதல் 5 மணி வரைக்குள். இதற்கு முன் கருத்துகணிப்புக்கள் பொய்யானது உண்டு. எங்கள் கட்சி வாக்காளர்கள் தாமதமாகவே வந்து ஓட்டளித்தனர். மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. நிச்சயமாக டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என்றார். காலை 10.30 மணிக்குள் அனைவரும் குடும்பத்துடன் வந்து ஓட்டளிக்கும்படி அமித்ஷா பா.ஜ.,வினரை கேட்டிருந்த போதிலும், ஓட்டுப்பதிவு முடியும் சமயத்திலேயே பா.ஜ.,வினர் அதிகம் வந்து ஓட்டளித்ததாக அக்கட்சியினர் கூறுகின்றனர். பிப்.,11 ல் வெளியாகும் முடிவுகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் என அமித்ஷா கூறி இருந்ததால், தாமதமாக வந்து ஓட்டளித்தது பா.ஜ.,வின் யுக்தியாக இருக்கக் கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY