Skip to content
Home » டில்லி…….விவசாயிகள் போராட்டம் 2 நாள் நிறுத்தம்

டில்லி…….விவசாயிகள் போராட்டம் 2 நாள் நிறுத்தம்

 கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி நோக்கி செல்லும் பேரணியை இரண்டு நாட்களுக்கு நிறுத்துவதாக போராடும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தலைவர் சர்வான் சிங் பாந்தர் இன்று  கூறியதாவது:    அரியானமா மாநிலம்  ஷம்பு எல்லையில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு இரண்டு நாட்களுக்கு டில்லி சலோ போராட்டத்தை நிறுத்திவைப்பதாக முடிவு செய்துள்ளோம். துணை ராணுவப் படையினரைக் கொண்டு எங்கள் மீது  மத்திய அரசு தாக்குதல் நடத்துகிறது.

இந்தச் சூழலில் இரண்டு நாட்கள் டில்லி சலோ போராட்டத்தை நிறுத்தி வைக்கிறோம். இப்போதைக்கு இங்கேயே (ஹரியாணாவில்) போராட்டம் நடைபெறும். நிலவரத்தை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நகர்வு பற்றி முடிவெடுப்போம். ஏனெனில் மிகுந்த வேதனைக்குரிய சம்பவங்கள் பல நடந்துவிட்டன.

பேரணியில் வெறும் கைகளோடு நடந்து சென்ற விவசாயிகள் மீது ரப்பர் புல்லட்டுகள் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஒரு விவசாயியை சாக்கில் கட்டி அவரது கால்களை உடைத்து வயல்வெளியில் வீசியுள்ளனர். விவசாயிகளின் 30-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை சேதப்படுத்தியுள்ளனர். நாங்கள் அமைதியாகத்தான் சென்றோம். எங்கள் மீதான இந்த வன்முறையை ஒட்டுமொத்த நாடும், ஏன் இந்த உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் போக்கு மிகவும் தவறானது.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பது மிகவும் முக்கியமான விஷயம். இதில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தென் இந்தியா என அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!