டில்லி கலவரம் பலி 22.. உளவுத்துறை அதிகாரி சடலமாக மீட்பு

564

குடியுரிமை திருத்த சட்டத்தின் எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில் வடகிழக்கு டெல்லி பகுதி போர்க்களமாக காட்சியளிக்கிறது. வன்முறையில் தற்போது வரையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே போலீஸ்காரர் பலியான நிலையில் நேற்று காணாமல் போன உளவுத்துறை அதிகாரிஅங்கித் சர்மாயின் சடலம் சாந்த் பாக்கில் கழிவு நீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் நேற்றிரவு வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டார். கலவரத்தை கட்டுபடுத்த முடியாமல் இருந்த 5 அதிகாரிகளை இடமாற்றம் செய்து டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 

LEAVE A REPLY