சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை….பாதிரியார் உள்ளிட்ட 4 பேர் கைது.. ….

158
Spread the love

டில்லியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 50 குடும்பத்தினர் பூரண நங்கலில் மின்சார சுடுகாடு அருகில் வசித்து வருகின்றனர். அங்கு வசித்து வந்த கூலித்தொழிலாளிகளின் 9 வயது சிறுமி குடிநீர் எடுக்க சுடுகாட்டு அருகே சென்றவர் திரும்பி வரவேயில்லை. இந்த நிலையில் சிறுமியை தேடி சென்ற பெற்றோர்கள் சிறுமி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் சிறுமி மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என அங்கு வசித்து வரும் பாதிரியார் ராதே ஷ்யாம் கூறியுள்ளார், மேலும் தகன மேடை ஊழியர்கள் சலீம், லட்சுமி நாராயண் மற்றும் குல்தீப் ஆகியோர் சிறுமி மின்சாரம் பாய்ந்து தான் இறந்தார் என கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இந்த நிலையில் உடனே சிறுமியின் உடலை எரித்து விட பாதிரியார் மற்றும் அவரது நண்பர்கள் மூவரும் கூறியுள்ளனர். மேலும் போலீசில் புகார் கொடுத்தால் பிரேத பரிசோதனை செய்து உடல் உறுப்பை திருடிவிடுவர் என கூறினர். இதையடுத்து சிறுமியின் உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது.

இந்த நிலையில் சிறுமியின் உடலை எரிக்கும் போது, சிறுமியின் தாய் நீங்கள் ஏதோ தனது மகளை செய்துவிட்டீர்கள் என கூறியபடியே குழந்தையின் உடலை சோதித்தார். மேலும் குழந்தையின் மணிக்கட்டு மற்றும் கைகளில் காயம் இருந்ததற்கான அடையாளம் காணப்பட்டன. சிறுமியின் உதடுகளும் நீல நிறத்தில் இருந்தன.

இதையடுத்து குழந்தையை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து நாடகமாடுவதாக சிறுமியின் தாய் குற்றம்சாட்டி அக்கம் பக்கத்தினரை அழைத்தார். இதையடுத்து சிறுமியின் உடலை எரித்த 4 பேரும் அங்கிருந்த தப்பி செல்ல, 90 சதவீதம் உடல் எரிந்த நிலையில் சிறுமியின் சடலத்தை மீட்டு போலீசில் புகார் கொடுத்தனர்.

எஞ்சிய சடலத்தை வைத்து போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அறிந்த உறவினர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

LEAVE A REPLY