Spread the love

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடி, ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோத பரிவர்த்தனையும் செய்த  நீரவ் மோடி தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். தற்போது தேடப்படும் நபராக உள்ள அவரது 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது. 

இதற்கிடையே மகாராஷ்டிரா மாநில அலிபாக் பகுதியில் கடற்கரையை ஒட்டி அவருக்கு சொந்தமான 33,000 சதுர அடியில் 100 கோடி மதிப்பிலான ஒரு பங்களா உள்ளது. இந்த பங்களா மும்பையிலிருந்து 90 கி.மீ. தொலைவில் ராய்கட் மாவட்டம் கிஹிம் கடற்கரைக்கு மிக நெருங்கிய பகுதியில் உள்ளது. கடற்கரையை ஆக்கிரமித்து இந்த பங்களா கட்டப்பட்டதாக சம்புராஜே யுவ கிராந்தி என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் பங்களாவை இடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பங்களாவை வெடிவைத்து தகர்த்துள்ளது.  

இது குறித்து ராய்கட் மாவட்ட கலெக்டர் விஜய் சூர்யவன்ஷி கூறியது:இந்த பங்களா மிகவும் வலிமையாக கட்டப்பட்டிருந்தது. அதிநவீன இயந்திரங்களை வைத்து கட்டுமானத்தை இடித்தாலும் கூட மாதக்கணக்கில் வேலை செய்ய வேண்டியிருக்கும். அதனால் இம்ப்ளோசிவ் (Implosive -உள்வெடிப்புமுறையை) பயன்படுத்தி கட்டிடத்தை தகர்த்தோம் என்றார்.

 

LEAVE A REPLY