டிஜிபியே பொறுப்பு..கோர்ட் கண்டிப்பு

264
Spread the love

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக சென்னை ஐகோர்ட் பொன். மாணிக்கவேலை நியமித்தது. அவர் தீவிர நடவடிக்கை எடுத்து வெளிநாடு உள்பட பல இடங்களிலிருந்து சிலைகளை மீட்டு வந்தார். சிலை கடத்தல்களில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக பொன்.மாணிக்கவேலை புகார் தெரிவித்தார்.

பொன்.மாணிக்கவேலுக்கு தமிழக அரசு பல்வேறு இடையூறுகள் செய்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில் பொன். மாணிக்கவேல் கேட்ட போலீசாரை தர வேண்டும், அவர்களின் ஊதியம், உள்ளிட்ட 10 உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இவற்றில் 6 உத்தரவுகளை நிறைவேற்றவில்லை என்று பொன்.மாணிக்கவேல் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொன். மாணிக்கவேல் கூடுதல் டிஜிபி ஒருவர் விசாரணையில் தலையிடுவதாகவும், தங்கள் அதிகாரிகளை மாற்றுவதாகவும் புகார் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் ஆதிகேசவலு, மகாதேவன் கூறியதாவது, நாங்கள், அரசு, போலீஸ், சிறப்பு அதிகாரி ஆகியோருக்கு ஆதரவாகவோ, எதிராகவோ செயல்படவில்லை. நம் மண்ணின் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறோம். கோர்ட் உத்தரவுகளை நிறைவேற்றாவிட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பேற்க வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் அரசு வக்கீல் மாற்றப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY