டிஜிட்டல் ஊடகங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்…

190
Spread the love

 மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு.. அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களைப் போலவே டிஜிட்டல் ஊடக அமைப்புகளின் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், வீடியோகிராபர்கள், முதல் கட்டத் தகவல்களை பெறுவதற்கும் மற்றும் அணுகுதலைப் பெறவும் அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் கூட்டத்தில் மற்றும் அது போன்ற உரையாடல்களில் பங்கேற்பதற்கான பத்திரிகை தகவல் மையத்தின் அங்கீகாரம் வழங்கப்படும்.

டிஜிட்டல் பத்திரிகையாளர்களுக்கும் அரசின் பத்திரிகையாளர் அங்கீகார அடையாள அட்டை வழங்கப்படும். அதற்குரிய பலன்களும் விரிவாக்கம் செய்யப்படும். ரயில் பயண சலுகையும் அளிக்கப்படும். மத்திய அரசின் தகவல் தொடர்பு பணியகம் மற்றும் கள அலுவலகத்தின் வாயிலாக டிஜிட்டல் விளம்பரங்களைப் பெறுவதற்கான தகுதி டிஜிட்டல் ஊடகங்களுக்குக் கிடைக்கும்.  அச்சு, மின்னணு ஊடகத்தில் இருக்கும் சுய ஒழுங்கு படுத்தும் அமைப்புகளைப் போல, டிஜிட்டல் ஊடகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நலன்களை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்வதற்கும் சுய கட்டுப்பாடு அமைப்புகளை உருவாக்க முடியும்  என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் ஊடகங்களுக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY