கமல் பட டைரக்டருக்கு கொரோனா..

48
Spread the love

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்கள் இயக்கியுள்ளவர் மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். இவர் தமிழில் கமல் வைத்து ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். ஜனரஞ்சக இயக்குனர் என்று ரசிகர்களால் பெயர் எடுக்கப்பட்ட சிங்கீதம் சீனிவாச ராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். 65 வயதை கடந்து விட்ட அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY