பிரபல தமிழ் டைரக்டர் கொரோனாவுக்கு பலி…

232
Spread the love

தொலைக்காட்சி தொடர்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதிக்கொண்டிருந்த தாமிரா என்கிற காதர் மொகைதீன், பாலசந்தர் -பாரதிராஜா ஆகியோரை வைத்து ஷங்கர் தயாரிப்பில் ‘ரெட்டைசுழி’படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். இதையடுத்து சமுத்திரக்கனியை வைத்து ”ஆண் தேவதை ” சினிமாவை எடுத்தார். நடிகர் சத்யராஜை வைத்து வெப் சீரிஸ் இயக்கி வந்தார்.

இந்நிலையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மாயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த தாமிரா, ‘’இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை. என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன். இனி யாரோடும் பகைமுரண் இல்லை. யாவரும் கேளிர்’’என்று உருக்கமுடன் தெரிவித்திருந்தார் தனது பேஸ்புக் பக்கத்தில். அவர் மீண்டு வந்துவிடுவார் என்று எல்லோரும் சொல்லி வந்த வேளையில் அவரின் மரணம் திரை உலகினரிடை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY