திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கியது …. டெல்லி கோர்ட்….

39
Spread the love

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் , டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த டூல்கிட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த டூல்கிட் தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் திஷாரவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்டு திஷா ரவி தரப்பில் மனு தாக்கல்செய்யப்பட்டபோது, நீதிமன்ற விசாரணையில் , ‘உழவர் போராட்டத்தை உலகறிய செய்வது தேசத்துரோகமெனில் நான் சிறையில் இருக்கவே விரும்புகிறேன்’ என துணிச்சலோடு நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறார் திஷாரவி(22). வழக்கு-சிறை நெருக்கடியிலும் இப்படி துணிச்சலாக இப்பெண் முழக்கமிடும் போது இந்த இளம்பெண் தனிமைப்படாமல் இவருக்கு துணை நின்று அவரின் துணிச்சலை கொண்டாடுவதே பாசிசத்திற்கு சாவு மணியடிக்கும் என்று திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்து வந்தனர். கிரேட்டா தன்பெர்க்கும் திஷா ரவிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரிதாகி வந்த நிலையில், கோர்ட் இன்று திஷாரவிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY