Spread the love
சுற்றுச்சூழல் மாசாவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம் எது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது. 
 
இதையடுத்து கடந்த ஆண்டு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. 
இந்த ஆண்டு தீபாவளி வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி  தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம், புனித தலங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY