தம்பிக்கு கொரோனா… தனிமையானார் ஓபிஎஸ்

494
Spread the love

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்சின் தம்பி ராஜாவிற்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தன் காரணமாக அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து இன்று காலை சென்னை சென்ற அவர் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அட்மிட் ஆனார். இந்த நிலையில் நேற்று இரவு பெரியகுளத்தில் இருந்து துணை முதல்வரை சந்தித்துபேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் ராஜாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட ஓபிஎஸ் இன்று தேனி மாவட்டம் கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தனிமை படுத்திக்கொண்டதாகவும் நாளை அல்லது நாளை மறுநாள் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

LEAVE A REPLY