“அனைத்து மொழிகளையும் கற்போம்”…. டீசர்ட் மூலம் திமுகவுக்கு தேமுதிக பதிலடி….

1318
Spread the love

கடந்த வாரம் இந்தி தெரியாது போடா என்கிற வாசகம் அச்சடித்த சிகப்பு நிற டீசர்ட் அணிந்தபடி சில பிரபலங்கள் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்க புகைப்படங்கள் வைரலானது.. திடீரென இது எப்படி? என பலரும் சந்தேகத்துடன் விசாரிக்கையில் இதன் பின்புறத்தில் திமுக இருப்பது தெரியவந்தது. மேலும் திமுக தரப்பில்  திருப்பூரில் ஆர்டர் கொடுத்து இந்த டீசர்ட்டுகளை வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதன் எதிரொலியாக நான் இந்தி படிப்பேன்டா என பாஜ ஆதரவாளர்கள் சிலர் டீசர்ட்டுகளை போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில் தேமுதிகவின் நிறுவனர் நடிகர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் ‘ அன்னை மொழியை காப்போம்.. அனைத்து மொழிகளையும் கற்போம்.. கேப்டன்’என்கிற வாசங்கள் அடங்கிய மஞ்சள் நிற டீசர்ட்டை அணிந்தபடி வெளியாகியிருக்கும் படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. டீசர்ட்டின்  மறுபக்கத்தின் தமிழன் என்று சொல்லடா.. தலைநிமிர்ந்து நில்லடா என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது. திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி இந்தி தெரியாது போடா என்கிற வாசகம் அடங்கிய டீசர்ட் அணிந்தபடி போஸ் கொடுத்திருந்த நிலையில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. 

LEAVE A REPLY