வேலூர் தேர்தல்… திமுக அதிமுக வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு!

192

வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடக்கிறது. 50 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள் இன்று கலெக்டர்  சண்முகசுந்தரம் தலைமையில் பரிசீலனை செய்யப்பட்டது. அதிமுக சார்பில் மூர்த்தி, வக்கீல்கள், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், நந்தகுமார் வக்கீல்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பங்கேற்றனர். சுயேட்சை வேட்பாளர் ரவி என்பவர் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் புதிய நீதிக்கட்சி தலைவராக இருக்கிறார். அதிமுக அடிப்படை உறுப்பினராக இல்லாத அவர் எப்படி இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட முடியும். மனுவை நிராகரிக்க வேண்டும் என்றார்.

கடந்த தேர்தலில் அவர் மனு ஏற்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டார்கள் என்றார் சுயேட்சை வேட்பாளர் . இதனால் ஏ.சி.சண்முகம் மனு பரிசீலனை நிறுத்தி வைக்கபட்டது. பின்னர் அதிமுகவினர்  ஏ.சி.சண்முகம் அதிமுக அடிப்படை உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.

 பின்னர் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் மீது பணப்பட்டுவாடா புகார் இருப்பதால் கதிர் ஆனந்த் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததார். இதனால் அவரது மனு பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகளிடம் திமுகவினர் உரிய விளக்கம் அளித்தனர். பின்னர் திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

LEAVE A REPLY