Skip to content
Home » திமுக, அதிமுக தொண்டர்கள் கடும் வாக்குவாதம்

திமுக, அதிமுக தொண்டர்கள் கடும் வாக்குவாதம்

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையான வாக்களித்து வருகின்றனர்.

வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திமுக – அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு பெரியார் நகர் பகுதியில் வாக்குச்சாவடிக்கு அருகே வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டதால் திமுக – அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடி அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!