தொடரும் உதயநிதி கைது… டிஜிபியிடம் திமுக மனு..

134
Spread the love

தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக கடந்த 3 நாட்ளாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி கைத செய்யப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தமிழக டிஜிபியிடம், இன்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் அமித்ஷாவை வரவேற்க ஆயிரம் பேர் வந்திருந்தனர். அவர்களுக்கு காரில் இருந்து இறங்கி கையசைத்து நடந்து சென்றார். அந்தப் புகைப்படங்களை இம்மனுவுடன் இணைத்துள்ளேன். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?. ஆனால் உதயநிதி ஸ்டாலினை மட்டும் கைது செய்வது ஏன்? என்பது புரியவில்லை. பாஜகவின் வேல் யாத்திரையை தடுக்காமல் எல்லா ஊர்களுக்கும் அவர்கள் திட்டமிட்டது போல் நடத்துகிறார்கள். அவர்களைக் கைது செய்வது போல் செய்துவிட்டு சிறிது நேரம் கூட வைத்திருக்காமல் உடனடியாக விடுவித்து விடுகிறார்கள். திமுக விஷயத்தில் காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.. 

LEAVE A REPLY