லோக்சபா தேர்தலில் சிபிஎம்க்கு 15 கோடி, சிபிஐக்கு 10 கோடி திமுக கொடுத்தது ஏன்?

328
Spread the love

கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவற்றிற்கு தலா 2 இரண்டு இடங்களிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒரு இடத்திலும் போட்டியிட்டன. இந்த தேர்தலுக்காக கட்சிகள் செய்த செலவினங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். அதன்படி, கடந்த ஆக., 27ல் திமுக சார்பில் லோக்சபா தேர்தல் செலவினங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம், தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டது. இதில் சிபிஎம் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 15 கோடி ரூபாயும், சிபிஎம்மிற்கு 10 கோடி ரூபாயும் நன்கொடையாக வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஎம் சார்பில் ஜூலை 10 மற்றும் செப்., 13 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், நாடு முழுவதும் அக்கட்சியின் செலவினம் சுமார் ரூ. 7.2 கோடி எனக் கூறியிருந்தது. ஆனால் சிபிஐ சார்பில் இதுவரை தேர்தல் செலவுகளை சமர்ப்பிக்கவில்லை. திமுக வழங்கியாக கூறப்படும் நன்கொடை குறித்து  சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில் மாநில பிரிவின் மூலம் பெறப்பட்ட விவரங்களை மத்திய குழுவுக்கு அனுப்பியுள்ளதாகவும், அடுத்த பிரமாண பத்திரத்தில் அந்த விபரங்கள் தாக்கல் செய்யப்படும், எனக் கூறினார். சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், நாங்கள் பெற்ற பணம் ஊழல் பணமல்ல. தேர்தலின் போது கூட்டணி கட்சிகள் உதவினர், எனக் கூறினார். இந்த நன்கொடை  குறித்தது குறித்து திமுக தரப்பில் கேட்டதற்கு இது கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான ஒன்று தான். ஆனால் இந்தமுறை திமுக அதை தேர்தல் செலவினங்களில் சேர்த்துள்ளது என்கின்றனர். திமுகவின் தேர்தல் செலவுகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட நட்சத்திர பேச்சாளர்களுக்கு ரூ. 58.94 லட்சமும், ஊடகங்கள் வாயிலான பிரசாரத்திற்கு ரூ. 15.46 கோடியும் செலவாக காட்டியுள்ளது. மேலும், லோக்சபா வேட்பாளர்களுக்கு தலா ரூ. 50 லட்சமும், சட்டமன்ற வேட்பாளர்களுக்கு தலா ரூ. 25 லட்சமும் செலவு செய்ததாக திமுக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY