21ம் தேதி திமுக செயற்குழு அவசர கூட்டம்

116
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். இந்த கூட்டத்தில் கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எனவே, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி களுக்கான தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்தச் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY