மத்திய அரசை கண்டித்து IUML சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…

32
Spread the love

மத்திய அரசை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி காஜாநகர் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது… மத்திய அரசு தொடர்ந்து பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. டில்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காமல் இருப்பது கண்டிக்கத் தக்க செயல் ஆகும். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் 3 வேளாண் திட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று அவர் கூறினார். 

LEAVE A REPLY