கொரோனா நேரத்தில் சென்னையில் கூட்டமா?.. அதிர்ச்சியில் நிர்வாகிகள்..

210
Spread the love

கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் இறுதியில் இருந்து ஊரடங்கு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளின்போது கூட கூட்டம் இருக்க கூடாது என விதிமுறை தொடர்கிறது. பொதுக்கூட்டங்கள், ஆர்பாட்டம் போன்றவற்றிற்கு அனுமதியில்லை என்கிற நிலையும்  தொடர்கிறது. அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை பெரிய அளவிலான கூட்டங்கள் நடத்தப்படவில்லை. திமுக போன்ற சில கட்சிகள்  ஜூம் மூலமாக வீடியோ கான்பிரன்சிங் மூலம் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்டம் வாரியாக திமுக மும்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டங்களில் சென்னையில் இருந்தபடி திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

இத்தகைய சூழ்நிலையில் திடீரென இன்று திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பு  நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னை அறிவாலயத்தில் அக்டோபர் 21, 23, 27, 29 தேதிகளில் மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு மண்டலங்களின் நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என்றும் இதில் மாவட்டம் வாரியாக மாவட்டம், ஒன்றியம், நகர, பகுதி, பேரூர்,  கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம்  நடைபெறுகிறது  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா நேரத்தில் திமுகவின் இந்த அறிவிப்பு நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இது தொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில் ‘ மே மாதம் துவங்கி தலைவர் நிர்வாகிகளிடம் 3 முறை பேசி விட்டார். தற்போது மாவட்டம் தோறும் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் சென்னையில் கூட்டம் என்பது தான் பயமாக இருக்கிறது. எப்படியும் தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. சாப்பிட ஒட்டலுக்கு செல்ல வேண்டும்.. கொரோனா நேரத்தில் இவற்றையெல்லாம் நினைக்கும் போது பயமாக இருக்கிறது என புலம்புகின்றனர்.. 

LEAVE A REPLY