திமுகவில் இருந்து எம்.எல்.ஏ கு.க செல்வம் நீக்கம்…

56
Spread the love
ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் டெல்லி சென்று பாஜக தலைவர் ஜெ.பி நட்டாவை அண்மையில் சந்தித்தது தமிழக அரசியலில் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. பாஜக தலைவரை சந்தித்ததும் உடனடியாக கட்சியில் இருந்து கு.க செல்வத்தை இடை நீக்கம் செய்த திமுக தலைமை, உங்களை ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டது.  இதற்கு கு.க செல்வம் தரப்பில் விளக்கமும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில், கு.க செல்வம் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை எனக்கூறியுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.

LEAVE A REPLY