ஸ்டாலினுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு……

470
Spread the love

திருவாரூர் திருக்குவளையில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை துவங்குவதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கழக முதன்மை செயலாளரும் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கே.என். நேரு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் 

செயலாளர் அன்பழகன், திமுக வேட்பாளர்கள் திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முசிறி காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லூர் கதிரவன், மணப்பாறை திமுக கூட்டணி வேட்பாளர் மமக அப்துல் சமது, மாவட்ட துணை செயலாளர்கள் குடமுருட்டி சேகர், முத்து செல்வம், மற்றும் பகுதி உள்ளிட்ட  நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு வரவேற்பளித்தனர்.

LEAVE A REPLY