Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கே.என். நேரு முன்னிலையில் 27ம் தேதி திமுக செயல் வீரர்கள் கூட்டம்

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட
திமுக செயலாளர் ந.தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.கழக செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 27ந்தேதி (புதன்கிழமை) காலை சரியாக 9மணியளவில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத் தலைவர்கள், திரு. பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி, ஆகியோர் தலைமையிலும், கழக முதன்மை செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான கே.என்.நேரு, முன்னிலையிலும் நடைபெறவிருக்கின்றது.

இக்கூட்டத்தில் மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு இக்கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுகிறோம். கூட்டத்தில்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கருணாநிதியின் அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும்
கட்சியின் ஆக்கப்பணிகள்குறித்தும் விவாதிக்கப்படுகிறது என்று மாவட்ட செயலாளர்கள்வைரமணி காடுவெட்டி தியாகராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!