1. 45 நிமிடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும். லிப்ட்டை கூடுமானவரை தவிர்ப்பது உடல் நலனுக்கு நல்லது.

2. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஆனால் குளிர்காலத்தில் கறுப்பே சிறப்பு.

3. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் புத்துணர்ச்சியைத் தரும்.

4. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது அல்லது எக்ஸாஸ்ட் மின்விசிறியை ஓடவிடுவது நல்லது. சமையல் காஸிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு நல்லதல்ல.

5. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாய் உட்புற மென்மைத் தன்மை இழந்து, நார் போல மாறும். இது, வாய் புற்று நோய்க்கு வழிவகுக்கும்.

6. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிட வேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

7. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

8. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜிக்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

9. 40 வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்வது நல்லது. பாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

10. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களின் நோயை நமக்கு வாங்கித் தந்து விடும். எனவே பச்சை குத்துவதை தவிர்ப்பதே சிறந்தது.

LEAVE A REPLY