பஞ்சமி நிலம்.. “டாக்டரையும்” விசாரிக்கணும்.. பாரதி காட்டம்

288
Spread the love

முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலம் என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறியிருந்தார். இதையடுத்து பாஜகவை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இது குறித்து புகார் அளித்திருந்தார். இதனால் முரசொலி அறக்கட்டளை நிர்வாகிகள் இது குறித்து விளக்கம் அளிக்க இன்று ஆஜராக  வேண்டும் என்று தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து முரசொலி அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவரான ஆர்.எஸ்.பாரதி ஆவணங்களுடன் ஆஜரானார்.

அதன்பின் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி; ஆணைய தலைவரிடம் இது குறித்து விசாரிக்க உங்களுக்கு அதிகாரமே இல்லை என்று தெரிவித்தோம். யார் புகார் சொன்னாலும் விசாரிப்பீர்களா? பாஜக அலுவலகம், முதல்வர் வீடு பஞ்சமி நிலம் என்று புகார் சொன்னால் உடனே நீங்கள் விசாரிப்பீர்களா? என்று கேட்டோம்.

எங்களிடம் அசைக்க முடியாத ஆவணங்கள் உள்ளன. அவற்றை கொண்டு வந்தோம். இது குறித்த ஆவணங்களை திரட்ட அரசுக்கு ஒரு மணி நேரம்  போதும். ஆனால் புகார் கூறிய சீனிவாசனும், அரசும் அவகாசம் கேட்டனர்.  இதுவே எங்களுக்கு வெற்றி. இது குறித்து முதலில் புகார் கூறிய டாக்டரிடம் 1000 ஏக்கர் நிலம் உள்ளது. அது யார்,யாருடையது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்தார்.

LEAVE A REPLY