Skip to content
Home » 1021 டாக்டர்கள் உட்பட 2000 பேருக்கு பணி ஆணை வழங்குகிறார் முதல்வர்…. அமைச்சர் மா.சு பேட்டி…

1021 டாக்டர்கள் உட்பட 2000 பேருக்கு பணி ஆணை வழங்குகிறார் முதல்வர்…. அமைச்சர் மா.சு பேட்டி…

  • by Senthil

கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவின் கட்டண அறை திறப்பு,விஷ முறிவு சிறப்பு மருத்துவ மாநில பயிற்சி மையம் திறப்பு ஆகியவற்றை திறந்து வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் அவர் பேசும்போது… நிதி நிலை அறிக்கையில் 110 அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. மாரடைப்பால் ஏற்படும் உயிர்இழப்பை தடுக்க இருதய பாதுகாப்பு மருந்து வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.கோவை மதுக்கரை மலுமிச்சம்பட்டி கிராமத்தில் இந்த திட்டம் துவங்கபடுகிறது. 3கோடியே 37 லட்சத்தில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பாம்பு கடி, நாய் கடியால் பாதிக்கப்படும் நபர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 30 ஆயிரம் செவிலியர்களுக்கு விஷக்கடிக்கான பயிற்சி கோவை அரசு மருத்துவ மனையில் வழங்கப்படுகிறது. மாநில அளவிலான மையமாக கோவை அரசு மருத்துவமனை உள்ளது.

இந்தநிலையில் அந்த மருந்தை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான பயிற்சி கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு வழங்கப்படுகிறது.இது துவங்கப்பட்டுள்ளது.
இதனால் கோவை அரசு மருத்துவமனை மாநில அளவிலான பயிற்சி மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 30000 செவிலியர்கள் இந்த பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டில் டெங்கு மலேரியா போன்ற பாதிப்புகள் மாநகராட்சி நகராட்சிகளின் நடவடிக்கைகளால் குறைந்துள்ளது. 4300 காலி பணியிடங்கள் நிரப்பி உள்ளோம். 1021 மருத்துவர்களை நிரப்ப நேர்காணல் நடத்த அழைப்பு கொடுத்து 25 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இதன் பொது தேர்வுக்கான முடிவு 15 நாளில் வெளிவரும். அதன் பின் 1021 மருத்துவர்களும் 980 மருந்து ஆளுநர்களும் என ஒரே நாளில் 2000 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பணியானை வழங்குவார். காலி பணியிடங்கள் நிரப்ப தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய அளவிலான வழிகாட்டுதலின்படி பணி நியமனங்கள் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!