தடுப்பூசி அதிகம் வீணாக்குவதில் தமிழகம் முதலிடம் – ஆர்டிஐ மூலம் அம்பலம்

12
Spread the love

சுமார் 12 கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 44 லட்சம் டோஸ்கள் மாநிலங்களால் வீணாக்கப்பட் டுள்ளன. தடுப்பூசி டோஸ்கள் வீணாக்கப்படுவது தமிழ்நாட்டில் 12.10 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஹரியாணா 9.74 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், பஞ்சாப் 8.12 சதவீதத்துடன் 3-வது இடத்திலும், மணிப்பூர் 7.8 சதவீதத்துடன் 4-வது இடத்திலும், தெலங்கானா 7.5 சதவீதத்துடன் 5-வது இடத்திலும் உள்ளன. கேரளா, மேற்கு வங்கம், இமாச்சல்பிரதேசம், மிசோரம், கோவா, டாமன் அன்ட் டையூ, அந்தமான் நிகோபார் தீவுகள்,லட்சத்தீவுகளில் தடுப்பூசிகள் குறைந்த அளவில் வீணாக்கப்பட் டுள்ளன. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறும்போது, “சரியான திட்டமிடாமையால் பிரச்சினை உருவாகியுள்ளது. தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு நாட்டில் நிலவவில்லை. மாநில அரசுகள் கேட்கும் மருந்துகளை முடிந்தவரை உடனுக்குடன் அனுப்பி வருகிறோம்” என்றார்.

LEAVE A REPLY