ராமதாசின் திடீர் ‘மூவ்’…. அதிமுக அதிர்ச்சி

571
Spread the love

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பாமக நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாசின் மூவ் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அன்றைய தினம் தமிழகத்தின் முக்கிய மீடியாக்களின் பொறுப்பாசியர்களுக்கு போன் செய்து பேசியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். அப்போது பேசிய விவகாரம் தான் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பான விவாதமாகியிருக்கிறது. ‘கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போது தனியாக நின்ற பாமக அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. ஆனால் உங்கள் சேனலில் அடுத்த முதல்வர் யார்? என்கிற பட்டியலில் அன்புமணியை ஏன் சேர்ப்பது இல்லை?’ என கேள்வி கேட்ட ராமதாஸ் ‘ உங்க பாணிக்கே வருவோம், நீங்க அடுத்த முதல்வர்னு போடுற பட்டியல்ல இருக்குறவங்கள எல்லாத்தையும் ஒரு விவாதத்துக்கு கூப்பிடுங்க, அன்புமணியும் வருவார். அப்ப யார்? புத்திசாலி, திறமைசாலினு  மக்களுக்கு தெரியட்டும்’ என  கூறியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். 

அதிமுக கூட்டணியில் சேர்ந்து தான் பாமக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்த்து இருக்கும் நிலையில் பாமகவின் இந்த மூவ்வை அதிமுக அதிர்ச்சியாகவே பார்த்துக்கொண்டிருக்கிறது.. 

LEAVE A REPLY