கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மரதஹலி, பொம்மனஹலி, புலகேசி நகர் மற்றும் பாரதி நகர் ஆகிய பகுதிகளில் போலீசார் நேற்று அதிரடி ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது 10 கிலோ கஞ்சா உட்பட போதப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.மேலும் போதப்பொருளை விற்பனை செய்த 4 பேரை கைது செய்தனர்.
போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ 15 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.போதைப்பொருள் விற்பனையில் கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
