Spread the love

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலுள்ள மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபா. 163 மாடிகளை கொண்ட இந்த உயரமான கோபுரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படம் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. வரும் 11ம் தேதி துபாய்க்கு 2 நாட்கள் பயணமாக செல்லவிருக்கிறார். அதனை முன்னிட்டு சமூக வலைதள பக்கத்தில் இந்தியில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், துபாய் பயணத்திற்கு முன்பாக மிக உயரமான கோபுரமான புர்ஜ் கலிஃபாவில் ராகுல் காந்தியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை பலரும் இதே பதிவுடன் கூடிய வீடியோவை ஷேர் செய்துள்ளனர். இந்த வீடியோ கிட்டத்தட்ட 3,500 முறை ஷேர் செய்யப்பட்டு, 52,000 முறை பார்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY