துபாயில் இருந்து திருச்சிக்கு 3 கிலோ தங்கம் கடத்தல்.. 2 பேரிடம் விசாரணை

84
Spread the love

துபாயில் இருந்து திருச்சிக்கு கிலோ கணக்கில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர்கள் திருச்சியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமான பயணிகளான அதிராமபட்டினத்தை சேர்ந்த அகமது நபீல் , திருச்சியை சேர்ந்த ரமீஷ் ரஹ்மத்துல்லா ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 கிலோ 608 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தொிய வந்தது. இதனை தொடர்ந்து 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் 6.5 கிலோ தங்கம் பிடிபட்டுள்ள நிலையில், தற்போது 3.6 கிலோ தங்கம் பிடிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY