ஜல்லிக்கட்டில் சோகம்…கிணற்றில் விழுந்து காளை பலி…

187
Spread the love
ஜல்லிக்கட்டின் போது கிணற்றில் பாய்ந்த காளை பலி..! பாதியில் நின்ற போட்டி…

திண்டுக்கல் கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளைகளில் ஒன்று கிணற்றில் விழுந்து பலியானதால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. . வெள்ளோட்டை சேர்ந்த பெளிக்ஸ் என்பவரது ஜல்லிக்கட்டு காளை கிணற்றில் தவறி விழுந்து பலியானது.

திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகளும், வீரர்களும் பங்கேற்றனர். ஆனால் போட்டி நடைபெற்ற இடத்தை சுற்றி சரியான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் வீரர்களின் பிடியில் சிக்காமல் சீறி சென்ற கல்லுப்பட்டியைச் சேர்ந்த பெலிக்ஸ் என்பவரது காளை ஒன்று அங்கிருந்த பராமரிப்பற்ற கிணற்றில் தவறி விழுந்தது.
 

இதனால் போட்டி உடனேயே நிறுத்தப்பட்டதையடுத்து, சம்பவம் குறித்து தீ அணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொசவபட்டிக்கு விரைந்து வந்த வீரர்கள் காளையை மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர். ஆனால் அந்த காளை நீரில் மூழ்கி உயிரிழந்தது. அந்த காளையை கயிறு கட்டி மேலே கொண்டு வரப்பட்டபோது அங்கு சுற்றியிருந்த மக்கள் கதறிய நிகழ்வு காண்போரின் நெஞ்சங்களை உருக்கியது. இதையடுத்து இறந்த காளைக்கு மாடுபிடிவீரர்கள் அஞ்சலி செய்தனர். 
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முன்பாக தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யாமல் விட்டதால்தான் ஜல்லிக்கட்டு காளை இறந்துபோனது எனக்கூறி, மாடு வளர்ப்போர் போராட்டம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY