உ. பி., யில் கூட்டணி முடிவாகிடுச்சு.. கழட்டி விடப்பட்ட காங்…

238
Spread the love
மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கார் ஆகிய மூன்று மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று காங்கிரஸ்  ஆட்சி அமைத்து உள்ளது. இந்த மூன்று மாநில தேர்தல்களின் வெற்றி காங்கிரசுக்கு தெம்பை அளித்து உள்ளது.  இதனால்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டு உள்ளது. இதன் முன்னோட்டமாக  சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில்  பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்  நாம் டெல்லியில் புதிய பிரதமரை அமர வைப்போம். புதிய இந்தியாவை உருவாக்குவோம். கருணாநிதியின் மகனாக தமிழகத்தில் இருந்து இப்போது ராகுல்காந்தி பெயரை நான் முன்மொழிகிறேன் என்று அறிவித்தார்.  இந்த அறிவிப்பு  கூட்டணி கட்சி தலைவர்களிடத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க அமைச்சருமான சுப்ரதா முகர்ஜி  கூறுகையில் பாஜகவை தோற்கடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றை செய்வது மட்டுமே இப்போதைக்கு எங்களது முடிவாகும். அதனை நாங்கள் தனியாகவே செய்வோம். மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைவருடனும் ஆலோசித்து முடிவு செய்வோம் என்று அதிரடியாக கூறியுள்ளார். இது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்  கூறுகையில், மு.க. ஸ்டாலின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. கூட்டணி கட்சிகளின் கருத்து இல்லை என்றார். 
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி என்பது பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி இடையே முடிவாகி விட்டது இந்த இரு கட்சிகளும் தங்களுக்குள்  இடஒதுக்கீடுகளை முடிவு செய்து விட்டன. இந்த கூட்டணியில் அந்த இரு கட்சிகளும்  காங்கிரசை சேர்த்து கொள்ளவில்லை. காங்கிரசை கழற்றி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 

LEAVE A REPLY