வேலூரில் நாளை தேர்தல்… 11 தேர்தல் லேப்டாப்புகள் திருட்டு

164

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் வாக்குச்சாவடியாக செயல்படும் குடியாத்தம் அரசு தொடக்கப்பள்ளியில் வகுப்பறை பூட்டை உடைத்து அதில் வாக்குபதிவு கண்காணிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் 11 லேப்டாப்புகளை நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். லேப்டாப்புகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தினால் வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடதக்கது. திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY