திருச்சி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் நிறைவு…. – 74 பேர் போட்டி

60
Spread the love

திருச்சி மாவட்டத்தில் 3 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 2 கிராம பஞ்சாயத்து தலைவர், 19 கிராம பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பதவி என மொத்தம் 24 பதவிக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  நேற்று வரை 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இறுதி நாளான இன்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட 27 பேர், கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 4 பேர், கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 19 பேர் என மொத்தம் 54 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள 24 உள்ளாட்சி பதவிகளுக்கு 74 பேர் போட்டியிடுகின்றனர்.  மனு வாபஸ் பெற கடைசி நாள் 25ம் தேதி, வாக்கு பதிவு அக்டோபர் 9ம் தேதி, வாக்கு எண்ணிக்கை 12ம் தேதி, பதவி ஏற்பு 20ம் தேதியும் நடைபெற உள்ளது. 

LEAVE A REPLY