வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.. ஸ்டாலின்

403
Spread the love

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அளித்த பேட்டி; உள்ளாட்சி தேர்தல் குறித்து இன்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது. நாங்கள் தேர்தலை நிறுத்த வழக்கு தொடரவில்லை. தொகுதி வரையறை, இட ஒதுக்கீடு கேட்டுதான் வழக்கு தொடர்ந்தோம். இதை கோர்ட் தெளிவாக புரிந்து கொண்டது. நாங்கள் சொன்னது போல தேர்தல் வரும் நேரத்தில் எதற்கு புதிய மாவட்டங்கள் தொடங்கினீர்கள்? தேர்தலை குளறுபடியாக நடத்த திட்டமிடுகிறீர்களா? என்று நீதிபதிகள் அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கேட்டனர்.

நாங்கள் முறையாக தேர்தல் நடத்த கோரிக்கை விடுக்கும் நிலையில் சில ஊடகங்கள் மீண்டும்,மீண்டும் திமுக தேர்தலை சந்திக்க பயப்படுகிறது என்று செய்தி வெளியிட்டன. தீர்ப்பிற்குப் பிறகாவது இதை மாற்றிக் கொள்ள வேண்டும். எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் எங்களுக்கே வெற்றி.

தற்போது பழைய தேர்தல் தேதியை ரத்து செய்து புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இட ஒதுக்கீடு, தொகுதி வரையறையை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் குழப்பம் ஏற்படும். தேர்தலை தான் ஆணையம் நடத்தும். வார்டு வரையறை செய்ய வேண்டியது அரசு. ஆனால் அதை அரசு இதுவரை செய்யவில்லை. நாங்கள் தேர்தலை சந்திக்க தயார். மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.

LEAVE A REPLY