திருச்சி அருகே தேர்தலில் முதல்வரான பள்ளி மாணவி..

173
Spread the love

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 1962 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளி 1991ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 35 ஆசிரியர் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 431 மாணவர்களும் 412 மாணவர்கள் என 843 பேர் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி மட்டும் இன்றி பொது அறிவு கற்றுத்தரப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான இந்திய குடியாட்சி தத்துவத்தின் மேன்மையை பள்ளி மாணவ- மாணவிகள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மாதிரி சட்டப்பேரவை தேர்தல் இந்த பள்ளியில் நடத்தப்பட்டது. இதற்காக பள்ளி ஆசிரியர்களே தேர்தல் ஆணையர்,  வாக்குச்சாவடி அலுவலர்களாக  நியமிக்கப்பட்டனர். இந்த தேர்தலில் போட்டியிட 20 மாணவர்கள் வேட்பு மனு செய்தனர். வருகை பதிவு குறைவாக இருந்ததன் அடிப்படையில் 3 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. எனவே 11 மாணவிகளும், 6 மாணவர்களும் தேர்தலில் போட்டியிட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்த மாணவ, மாணவிகள் தீவிர பிரச்சாரத்திலும் பள்ளி வளாகத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நாள் அன்று நீண்ட வரிசையில் நின்று மாணவ, மாணவிகள் வாக்களித்தனர். வாக்கு சீட்டு பயன்படுத்தியே வாக்கு பதிவு நடைபெற்றது. வாக்கு பதிவு முடிந்த

 

பின்னர், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.  மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 587 என்ற நிலையில்,  பதிவான வாக்குகள் 513 என 87 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் 146 வாக்குகள் பெற்று  10ம் வகுப்பு மாணவி பிருத்திமா வெற்றி பெற்றார். 114 வாக்குகள் பெற்று  11ம் வகுப்பு மாணவன் பசுபதி இரண்டாம் இடம் பிடித்தார். அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த பிருத்திமா முதல்வராகவும், இரண்டாம் இடம் பிடித்த பசுபதி துணை முதல்வராகவும் அறிவிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த வாக்குகள் பெற்றவர்களை கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், கலை, பண்பாடு, ஒழுக்கம், சட்டம் போன்ற துறை அமைச்சர்களாக நியமிப்பர். தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் எதிர்கட்சியினராக அறிவிக்கப்பட்டனர். 

LEAVE A REPLY