திருச்சி யானைகளுக்கு கொரோனா டெஸ்ட்…..

135
Spread the love

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை எம்ஆர் பாளையத்தில் யானைகள் காப்பகம் உள்ளது. தற்போது இங்கு மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்ட மலாய்ச்சி,  காஞ்சி மடத்திற்கு சொந்தமான ஜெயந்தி, சந்தியா, இந்து மற்றும்  ஜமீலா, கோமதி என்று  6 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா சிங்கம், குரங்கு போன்ற விலங்குகளுக்கும் பரவி வருகிறது.  இதன் காரணமாக முதுமலை சரணாயலத்தில் சிங்கம்  கரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே தமிழக அரசு காப்பகங்களில் உள்ள விலங்குகளுக்கு கரோனா பரிசோதனை

மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி திருச்சி மாவட்டம் எம்ஆர்பாளையம் யானைகள் காப்பகத்தில் உள்ள யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது.  கரோனா பரிசோதனை செய்வதற்கு முதுமலையில் இருந்து வந்த வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் யானைகளின் சளி மாதிரிகளை தனித்தனியாக சேகரித்தனர். பின்னர் அவை கொரோனா மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

LEAVE A REPLY