திருச்சியில் 13ல் வேலைவாய்ப்பு முகாம்!

87

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளதாவது; வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  வரும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் தனியார், பொதுத்துறை நிறுவனத்தினர் கலந்து கொள்கின்றனர். 
10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ கல்வித்தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்பவர்கள் கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 போட்டோவுடன் வர வேண்டும்.
இந்த முகாமில் வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு  ரத்து செய்யப்படமாட்டாது. பதிவு மூப்பு அப்படியே தொடரும். இந்தப் பணி முற்றிலும் இலவசமானது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY