என்ன செய்யப்போகிறார் சசிகலா….?

618
Spread the love
சசிகலா தலைமையிலான அதிமுகவிலிருந்து, பன்னீர் செல்வம் விலகியதும், எடப்பாடி பழனிசாமியும் பன்னீர் செல்வமும் இணைந்ததும் பாஜக தலையீட்டின் பேரில்தான் என்பது அதிமுகவில் உள்ள பெரும்பாலோனரின் கருத்தாக உள்ளது. இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க  சசிகலா, அதிமுக இணைப்பு அவசியம் என பாஜ நினைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் அதன் காரணமாகவே பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்த டிடிவி தினகரன் சமீபகாலமாக அமைதியாக இருபு்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இத்தகயை சூழ்நிலையில் சசிகலாவை குறிவைத்து மீண்டும் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவுகளின் நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதே சமயம் சசிகலாவிடம் உள்ள பல ஆயிரம் கோடி சொத்துக்கள் தொடர்பாகவும் பாஜ வேறு ஒரு வகையில் பேச்சுவார்தை நடத்தி வருவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக பாஜவின் பேரத்திற்கு சசிகலா சம்மதம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கூட அவர் விடுதலையாக வாய்ப்பு இல்லை, மற்ற வழக்குகளில் நெருக்கடி என பல்வேறு சிக்கல்களி்ல் இருந்து சசிகலாவால் விடுபடமுடியும். அதன் வெளிபாடு தான் ஐடியின் முடக்கம்  நடவடிக்கை என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.. 

LEAVE A REPLY