என்கொயரிக்காக டில்லி செல்லும் ஈவிகேஎஸ்?

174
Spread the love
தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் கோஷ்டி பூசலால் தற்போதைய திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு கோஷ்டியாக டெல்லி சென்று ராகுலிடம் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் திருநாவுக்கரசரை எதிர்த்து தனி ஆவர்த்தனம் செய்து வந்தது, காங்கிரஸ் சார்பில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளாதது குறித்தும் ராகுலிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. 
5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் இருந்ததால் ராகுல் இந்த பிரச்னைகளில் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் தற்போது 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் ஓய்ந்து விட்டது. இதையடுத்து ராகுல் டெல்லி திரும்பியுள்ளார். இதையடுத்து மாநில கட்சி விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில்தான் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு, ராகுல்காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்தது. இதையடுத்து இன்று  இளங்கோவன் டெல்லி புறப்பட்டு சென்றார். இதனால்  அவருக்கு எதிரான புகார்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஈவிகேஎஸ் டெல்லி பயணம் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY