கல்யாணத்த நிறுத்திய மாப்பிள்ளை… காதலிக்கு என்ன சரியில்ல தெரியுமா?

801
Spread the love
கர்நாடகாவின் ஹசன் நகருக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரகுகுமார். இவர் சங்கீதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த இருவரும், தங்கள் வீட்டில் பேசி, அவர்களின் சம்மதத்துடன் திருமணத்திற்கு ஏற்பாடு நடந்துள்ளது.

திருமணத்தன்று சடங்குகளின் போது சங்கீதா அணிந்திருந்த புடவையின் தரம் சரியில்லை எனவும், அந்த புடவை தங்களுக்கு பிடிக்கவில்லை எனக்கூறிய ரகுகுமாரின் பெற்றோர், அதை மாற்றும்படி சங்கீதாவிடம் கூறி உள்ளனர். ஆனால் அதற்கு மணமகள் சங்கீதா மறுப்பு தெரிவித்ததை அடுத்து, ரகுகுமாரன் பெற்றோர் திருமணத்தை நிறுத்தி உள்ளனர். ரகுகுமாரும் ஏதும் பேசாமல் தனது பெற்றோர் கூறுவதை கேட்டு, அவர்களுடன் அமைதியாக சென்று விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சங்கீதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரின் தலைமறைவான ரகுகுமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY