Spread the love
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.  முதலில் விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்கள் என நிர்ணயிக்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி விசாரணை தொடங்கியது.
குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாததால் ஆணையத்தின் காலம் முதலில் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின் 2 முறை தலா 4 மாதம் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக ஜூன் 24 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் 
நேற்றுடன் முடிந்த நிலையில், மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது 5வது நீட்டிப்பாகும்.
 
 

LEAVE A REPLY