குடும்பத்தாருக்கு கொரோனா.. ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் விலகல்…

92
Spread the love
2021, ஐபிஎல் டி20 தொடரிலிருந்து டெல்லி கேபிடல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின்  விலகியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் விலகியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அதேநேரம், சூழல் நல்லபடியாக மாறினால், நான் அணிக்குள் மீண்டும் வருவேன் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக டுவிட்டரில் அஸ்வின் கூறியிருப்பதாவது “ 2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கொரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம். அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் சேர்வேன் என எதிர்பார்க்கிறேன்” எனப்பதிவிட்டுள்ளார். 
இந்த கடினமான தருணத்தில் அஸிவினுக்கு முழு ஆதரவு அளிப்பதாக டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகமும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. சென்னையில் இருக்கும் அஸ்வின் குடும்பத்தாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே அவர் விலகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன… 

LEAVE A REPLY