வாலிபரின் காதில் குடும்பம் நடத்திய கரப்பான் பூச்சி

195
Spread the love

சீனாவின் குவாண்டங் ஹூயாங் பகுதியைச் சேர்ந்தவர் லிவ் (23). இவருக்குக் கடந்த சில நாட்களாக காதுக்குள் ஏதோ ஊருவது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் லேசாக ஏற்பட்ட வலி சிறிது நேரத்தில் தாங்க முடியாத அளவுக்கு மாறியது. இதனால் துடிதுடித்த லிவ்வை வீட்டிலிருந்தோர் அருகிலிருந்த டாக்டரிடம் அழைத்துச் சென்றனர்.  அவரை டாக்டர் பரிசோதித்த போது அவர் காதுக்குள் ஒரு பெரிய கரப்பான் பூச்சி 10க்கும் மேற்பட்ட குட்டிகளுடன் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் குட்டி கரப்பான் பூச்சிகளை மெதுவாக வெளியே எடுத்தார்.

பெரிய கரப்பான் பூச்சி வெளிய வர மறுத்தது. பின்னர் காதுக்குள் தனி மருந்து ஊற்றி விஷேச கருவி கொண்டு நீண்ட போராட்டத்துக்குப்பின் அந்த பெரிய கரப்பான் பூச்சியும் ஒரு வழியாக வெளியே எடுக்கப்பட்டது. காதுக்குள் இத்தனை பூச்சிகள் வந்தது எப்படி என்றே தெரியவில்லை என அப்பாவியாக தெரிவித்தார் லிவ்.

LEAVE A REPLY