டெங்குவுக்கு பிரபல குழந்தை நட்சத்திரம் பலி

245
Spread the love
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா போல நடித்து புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமான கோகுல் சாய்கிருஷ்ணா  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெங்களூர் தனியார் மருத்துவமனையில்  ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்  கோகுல் சாய்கிருஷ்ணா கடந்த 18 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
ஜூனியர் பாலகிருஷ்ணா என்றழைக்கப்படும் கோகுல் சாய்கிருஷ்ணாவின் மரணத்திற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் பாலகிருஷ்ணா தனது சமூக வலைத்தளத்தில் கோகுல் சாய்கிருஷ்ணாவின் எதிர்பாராத மரணம்  தனது இதயத்தை நொறுக்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY