4000 ஏழை குடும்பங்களுக்கு நிதியுதவி….. பிரபல கிரிக்கெட் வீரர்

60

சச்சின் டெண்டுல்கர் மும்பைக்கு வெளியே செயல்படும் லாப நோக்கற்ற அமைப்பான, ‘ஹை 5 அறக்கட்டளை’க்கு நன்கொடை வழங்கியுள்ளார். எனினும் எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்பதை சச்சின் தெரிவிக்கவில்லை. மும்பை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 4,000 ஏழை மக்களுக்கு நிதியுதவி செய்யும் வகையில் இந்த நன்கொடையை  சச்சின் டெண்டுல்கர்  வழங்கியுள்ளார். பிரதமரின் நிவாரண நிதி மற்றும் மகாராஷ்டிர முதல்வரின் நிவாரண நிதிக்கு சச்சின் டெல்டுல்கர்  தலா ரூ.25 லட்சம் வழங்கி இருந்தார். மேலும் மும்பையில் ஓரிரு பகுதிகளில் ஒரு மாதத்துக்கு 5,000 பேருக்கு உணவளிக்கும் செலவை ஏற்பதாகவும் சச்சின் உறுதியளித்திருந்தார்.

LEAVE A REPLY