அமைச்சர் வீடு முன் உண்ணாவிரதம்..ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!

268

பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக 5,400 ஆசிரியர்களுக்கு 17 பி மெமோ வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மெமோ வழங்கப்பட்டவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது. இது திரும்பப் பெறப்பட வேண்டும். இது குறித்து அரசிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் திருத்துறைபூண்டியில் இன்று அளித்த பேட்டி; ஆசிரியர்கள் மீதான 17 பி நடவடிக்கையை கைவிடாவிட்டால் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அந்தந்த முதன்மைக்கல்வி அலுவலர்கள் வீடுகள் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார். ஜாக்டோ – ஜியோ அமைப்பின் இந்த எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY