பட்டாசு வெடித்து சிதறியதில் தந்தை- மகன் பலி… வீடியோ

556
Spread the love

புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலைநேசன்(37). இவர் தமிழக பகுதியான கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபணாவை பார்ப்பதற்காக சென்று விட்டு, தனது 7 வயது மகன் பிரதீசுடனுடன்  டூவீலரில் 2 சாக்கு மூட்டைகளில் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி வந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் தமிழகம் – புதுச்சேரி எல்லைப்பகுதியான கோட்டக்குப்பம் அருகே சென்றபோது டூவீலரில் இருந்த நாட்டு வெடி பட்டாசுகள் எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது.

இதில் கலைநேசன் மற்றும் அவரது 7 வயது மகன் சுமார் 300 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் சாலையில் பயணம் செய்தவர்கள் படுகாயமடைந்து ஜிப்பர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சாலையில் செல்லும் போது கலைநேசனின் டூவீலர் வெடித்து சிதறிய சம்பவத்தின் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.அதன் வீடியோ வைரலாகி வருகிறது…

LEAVE A REPLY