ரஜினிக்கு முதல் வெற்றி… ராகவா லாரன்ஸ்

163
Spread the love
இதுவே ரஜினிக்கு முதல் வெற்றி, சீமான் அண்ணனுக்கு நன்றி. ராகவா லாரன்ஸ்

தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருகிறேன் என்று நேற்று அறிவித்தார்  ரஜினிகாந்த் . இதை பார்த்தவர்கள் அரசியலுக்கு வரவே மாட்டேன் என பளிச்சென்று சொல்ல வேண்டியது தானே என்று விமர்சிக்கிறார்கள். எழுச்சி ஏற்பட்ட பிறகு நீங்கள் எதற்காக அரசியலுக்கு வர வேண்டும், அப்படி ஒரு தலைவர் தேவையே இல்லை என்று மக்கள் விமர்சிக்கிறார்கள்.

 
இந்நிலையில் நடிகரும், டான்ஸ் மாஸ்டரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ்  ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 

சூப்பர் ஸ்டாரின் அரசியல் சுவை!
சுவை புதிது!
பொருள் புதிது!
வளம் புதிது!
சொற் புதிது!
சோதி மிக்க நவகவிதை,
எந்நாளும் அழியாத மா கவிதை!
“கவியரசன் தமிழுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது”
என் பாட்டுக்கு ராஜா,
இது காட்டுக்கு ராஜா!
இவை அன்று பாரதியார் சொன்னது!
இன்று நம் தலைவர் சொல்லும்
அரசியல் புதிது!
எண்ணங்கள் புதிது!
முதல்வர் பதவி வேண்டாம் என்கிற வழி புதிது!
இதை புரிந்து கொண்டால் நன்மை நமக்கு!
தலைவரை திட்டுபவர்கள் கூட,
தலைவரின் திட்டங்களையும்,
அவரது மனதையும் புரிந்து கொண்டு பாராட்டுகிறார்கள்!
இதுவே முதல் வெற்றி!
அப்படி தலைவரின் மனதை புரிந்து கொண்டு பாராட்டிய,
அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி!
நம் சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந்த் அவர்களின் எண்ணங்கள் நிறைவேற,
நான் வணங்கும் ராகவேந்திரா சுவாமியை வேண்டிக் கொள்கிறேன்! என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY